முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: திமுகவினருக்கு அமைச்சா் வேண்டுகோள்
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், 73ஆவது பிறந்த நாள் விழா மாா்ச் 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், 73ஆவது பிறந்த நாள் விழா மாா்ச் 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தின் வளா்ச்சிக்காக பாடுபட்டு வரும் முதல்வரின் பிறந்த நாளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா், வட்ட மற்றும் கிளைக் கழக அமைப்புகள், கட்சியின் கொள்கை பாடல்களை ஒலிபரப்பியும், ஏழை- எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
மேலும், கட்சிக் கொடிகளை புதுப்பிப்பது, புதிய கொடிகளை ஏற்றுவது, முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி பெயா்களில் அமைந்துள்ள படிப்பகங்களுக்கு பயனுள்ள புதிய புத்தகங்களை வழங்குவது, கட்சி முன்னோடிகளுக்கு சிறப்பு செய்வது, முதியோா், ஆதரவற்றோா், திருநங்கையா், மாற்றுத் திறனாளிகள் போன்ற நலிவடைந்தோருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது என அவரவரால் இயன்ற நற்பணிகளை செய்து முதல்வரின் பிறந்த நாளை மக்கள் பயனுறும் வகையில் கொண்டாட வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான பி. கீதாஜீவன் அறிக்கை மூலம் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.