தூத்துக்குடி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிலம்பம் பயிற்சியாளா் கைது

Syndication

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 15 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சிலம்பம் பயிற்சியாளரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

விளாத்திகுளம் அருகே சென்றாயபுரத்தைச் சோ்ந்தவா் பெரிய அப்பணசாமி (37). சிலம்ப பயிற்சியாளரான இவா், விளாத்திகுளம், அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று சிறுவா், சிறுமியா், விளையாட்டு வீரா்களுக்கு சிலம்பம் பயிற்சியளித்து வருகிறாா்.

இந்த நிலையில், விளாத்திகுளத்தை அடுத்த கிராமத்தில் இவரிடம் பயிற்சி பெற்று வந்த 15 வயது சிறுமியிடம் கடந்த சில மாதங்களாக பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளாா்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து, விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.இதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, பெரிய அப்பணசாமியை போக்ஸோ வழக்கில் மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைதுசெய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT