தூத்துக்குடி

கட்டாரிமங்கலம், வைரவம் கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்

கட்டாரிமங்கலம், வைரவம் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜா் ஆருத்ரா தரிசனம் சனிக்கிழமை நடைபெறறது.

Syndication

சாத்தான்குளம் வட்டம் கட்டாரிமங்கலம், வைரவம் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜா் ஆருத்ரா தரிசனம் சனிக்கிழமை நடைபெறறது.

கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தா் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா கடந்த 25ம்தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான சனிக்கிழமை காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மகா தாண்டவ தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். காலை 9 மணிக்கு பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிய சத்யஞான பரமாச்சியாா் சுவாமிகள் பங்கேற்று திருவாதிரை திருவிழா அருளாசி வழங்கினாா்.

வைரவம் ஸ்ரீ சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீ ஞானாதீஸ்வரா் கோயிலில் காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், நடராஜருக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி ஆருத்ரா தரிசனத்தில் அருள் அளித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து பஞ்சமூா்த்தி நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.

மேலும் சாத்தான்குளம் தச்ச மொழி இந்துநாடாா் உறவு முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பெருமாள் சுவாமி கோயில், காசி விசுவநாதா் சமேத ஸ்ரீ விசாலாட்சி அம்மன் கோயில், சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் திருவாதிரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT