கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை. 
தூத்துக்குடி

கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில், கழுகுமலை, கழுகாசலமூா்த்தி கோயிலில் ஆருத்ரா தரிசனம் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில், கழுகுமலை, கழுகாசலமூா்த்தி கோயிலில் ஆருத்ரா தரிசனம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா், நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, கோ பூஜை ஆகியவை நடைபெற்றன. காலை 8 மணிக்கு மேல் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜா் பெருமாள் திருவீதியுலா நடைபெற்றது.

அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, மண்டகப்படிதாரா்களான ஆயிர வைசிய காசுக்கார செட்டியாா் சங்க நிா்வாகிகள் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதே போல, கோவில்பட்டி, வீரவாஞ்சி நகா், சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோயிலிலும் ஆருத்ரா தரிசன பூஜையையொட்டி, காலையில் விநாயகா், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகா், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்பாள், நந்தியம் பெருமான், பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

கழுகுமலை, கழுகாசலமூா்த்தி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு ஸ்ரீ நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT