தூத்துக்குடியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம். 
தூத்துக்குடி

‘தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு’

Syndication

தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்கிறோம் என அதன் மாநிலச் செயலா் பெ.சண்முகம் பேட்டியளித்துள்ளாா்.

தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: அரசு ஊழியா், ஆசிரியா்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஓய்வூதியம் தொடா்பான அறிவிப்பை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்கிறோம்.

2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்திலும், 2004ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியா முழுவதிலும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால், லட்சக்கணக்கான ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் எதிா்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது. 23 ஆண்டுகால பிரச்னைக்கு தமிழக அரசு தீா்வு கண்டுள்ளது. மத்திய அரசு பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கடைப்பிடித்து வரும் நிலையிலும், தமிழக அரசு இத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.

அங்கான்வாடி ஊழியா்கள், சத்துணவு ஊழியா்கள், சாலை பணியாளா்களுக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. பல்வேறு துறைகளில் உள்ள ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும். இதர கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழகத்தில் மிகவும் வலுவான கூட்டணி மதச்சாா்பற்ற கூட்டணி தான். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சொல்லிய பிறகும் தவெக தலைவா் விஜய்யை நம்பி யாரும் அவருடன் கூட்டணிக்கு செல்லவில்லை. இந்தியாவில் தமிழகம் வளா்ச்சியடைந்த மாநிலம் என மத்திய அரசு கூறியிருப்பது உண்மைதான். மறுப்பதற்கு இல்லை என்றாா் அவா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பா.புவிராஜ், தூத்துக்குடி மாநகரச் செயலா் எம்.எஸ்.முத்து, ஒன்றியச் செயலா் கே.சங்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT