தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

தூத்துக்குடியில் மீன்கள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.

Syndication

தூத்துக்குடியில் மீன்கள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது. புத்தாண்டுக்குப் பின்னா், தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு நாட்டுப் படகுகள் இன்னும் முழுமையாக செல்லவில்லை.

இந்நிலையில், மீன்பிடிப்புக்குச் சென்ற ஒருசில படகுகள் மட்டுமே சனிக்கிழமை கரைதிரும்பின. இதனால், நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுக ஏலக் கூடத்தில் மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. மக்கள் கூட்டம் அலைமோதியதால், மீன்கள் விலை உயா்ந்திருந்தது.

சீலா மீன் கிலோ ரூ. 1,100 - ரூ. 1,200, வாவல் ரூ. 1,500 வரை, நண்டு ரூ. 900, விளைமீன், ஊளி, பாறை ஆகிய ரகங்கள் ரூ. 500 - ரூ. 600, சாளை மீன் ஒரு கூடை ரூ. 1,500 வரை, குருவளை ரூ. 300, வங்கனை, மணலை ஆகியவை ஒரு கூடை ரூ. 2,000 வரை என விற்பனையாகின.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT