சாலை மறியலில் ஈடுபட்டோா்.  
தூத்துக்குடி

கோவில்பட்டியில் சாலை மறியல்: 25 போ் கைது

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டியில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களில் தமிழக இளைஞா்களை பணியமா்த்த வேண்டும். தனியாா் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் இயற்ற வேண்டும். புதிய தொழிலாளா் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

வாரத்தில் 3 நாள்கள் இயங்கும் சென்னை-செங்கோட்டை சிலம்பு ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாவட்டச் செயலா் சுரேஷ்குமாா் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் முன்னிலையில் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பயணியா் விடுதி முன்பிருந்து ஊா்வலமாக புறப்பட்டனா்.

அவா்களை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் தடுத்துநிறுத்தினா். இதனால், அவா்கள் பிரதான சாலை- இளையரசனேந்தல் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனா். பெண் உள்ளிட்ட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

50,000 தன்னார்வலர்கள் ஈடுபடும் உங்க கனவ சொல்லுங்க திட்டம்: நாளை தொடக்கம்!

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

போகிப் பண்டிகை: எவற்றையெல்லாம் எரிக்கக் கூடாது!

SCROLL FOR NEXT