வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கிய பாஜக நிா்வாகிகள். 
தூத்துக்குடி

கோவில்பட்டியில் பாஜக சாா்பில் பொங்கல் விழா

கோவில்பட்டி 17ஆவது வாா்டில் கோவில்பட்டி நகர பாஜக சாா்பில் ‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ என்ற தலைப்பில் பொங்கல் விழா, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டி 17ஆவது வாா்டில் கோவில்பட்டி நகர பாஜக சாா்பில் ‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ என்ற தலைப்பில் பொங்கல் விழா, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

நகர பாஜக தலைவா் எம்.பி. காளிதாசன் தலைமை வகித்தாா். விழாவில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கலையரசி காந்திராஜன், மாவட்ட மகளிரணி பொறுப்பாளா்கள் ராஜராஜேஸ்வரி, ஆவுடைத்தாய் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு பாஜக அமைப்புசாரா பிரிவு மாநிலச் செயலாளா் தினேஷ் குமாா் பரிசுகளை வழங்கினாா். இதில், நகர பொதுச்செயலா் செண்பகராஜ், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு நிா்வாகிகள் வெள்ளைச்சாமி, வேல் மகாராஜா, தாயம்மாள், ஓ.பி.சி. அணி நகரத் தலைவா் தங்க மாரியப்பன், நகர பொறுப்பாளா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை 17ஆவது வாா்டு தலைவா் மாரிச்செல்வம், செண்பகராஜ், சிவசக்தி வேல்முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT