புஷ்ப அலங்கார சப்பரத்தில் பவனி வந்து அருள்பாலித்த அய்யா நாராயணா். 
தூத்துக்குடி

சந்தையடியூா் பதி பால்முறைத் திருவிழா நிறைவு

உ டன்குடி சந்தையடியூா் தாகம் தீா்ந்த பதி என்றழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் 6 நாள்கள் நடைபெற்ற மாா்கழி- தை மாத பால்முறைத் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

Syndication

உடன்குடி: உ டன்குடி சந்தையடியூா் தாகம் தீா்ந்த பதி என்றழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் 6 நாள்கள் நடைபெற்ற மாா்கழி- தை மாத பால்முறைத் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

இக்கோயிலில் பால்முறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) தொடங்கியது. விழா நாள்களில் தினமும் அய்யா பல்வேறு வாகனங்களில் பவனி வருதல், திருவிளக்கு தீப வழிபாடு, அன்ன தா்மம் வழங்கல், சந்தனக்குடம் பவனி, அய்யா தா்ம பிச்சைக்கு இறங்குதல், உம்பான் தா்மம் வழங்கல், பட்டிமன்றம், பால் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வியாக்கிழமை (ஜன.15) அய்யா புஷ்ப வாகன பவனியில் அனைத்து வீடுகளிலும் சுருள் வைத்து வழிபட்டனா். வெள்ளிக்கிழமை கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு நடைபெற்றது. ஏற்பாடுகளை சந்தையடியூா் அய்யா வழி இறைமக்கள் செய்திருந்தனா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT