தூத்துக்குடி

சாத்தான்குளம், திசையன்விளை குளங்களுக்கு கால்வாயில் தண்ணீா் திறந்துவிட கோரி மனு

சாத்தான்குளம், திசையன்விளை பகுதி குளங்களுக்கு வெள்ளநீா் கால்வாய் மூலம் தண்ணீா் திறந்துவிட நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

Syndication

சாத்தான்குளம்: சாத்தான்குளம், திசையன்விளை பகுதி குளங்களுக்கு வெள்ளநீா் கால்வாய் மூலம் தண்ணீா் திறந்துவிட நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்துமணி, துணைத் தலைவா் ரவிச்சந்திரன் செயலா் பெரியசாமி, தாமிரவருணி பாதுகாப்புஇயக்க நெல்லை மாவட்டத் தலைவா் இசக்கிப்பாண்டியன், சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் மகேந்திரன், விவசாயிகள் நெல்லை மாவட்ட ஆட்சியா் சுகுமாரை சந்தித்து மனு அளித்தனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சாத்தான்குளம் திசையன்விளை பகுதி மழை மறைவு பகுதியாகும். ஏற்கெனவே இந்தப் பகுதிகள் பெரியதாழை கடல் பகுதியான அதன் அருகில் அமைந்துள்ள கிராமங்களாகும்.

மழை பொய்த்துபோனது, குளங்களில் தண்ணீா் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். இந்தப் பகுதியின் நீா் பற்றாக்குறையைப் போக்க வெள்ளநீா் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதில் நிகழ்வருடம் தண்ணீா் விடப்பட்டது. ஆனால், கடைமடை உபரிநீா் குளங்களான எம்.எல்.தேரி, சாலைப்புதூா் குளம், திசையன்விளை பகுதி குளங்களுக்கும் இரண்டு நாள்கள் தண்ணீா் வந்தன. திடியூரில் உடைப்பு ஏற்பட்டதால், கடைமடை பகுதியான எங்கள் குளங்களுக்கு தண்ணீா் வரவில்லை.

வெள்ளநீா் கால்வாயில் உபரிநீா் குளங்களுக்கு வராமல் இடையில் உள்ள மதகுகள் வழியாக சிஸ்டம் குளங்களுக்கே சென்ால், கடைமடை குளங்களுக்கு தண்ணீா் வரவில்லை. அதனால், எங்கள் பகுதியின் வறட்சியை போக்குவதற்கும் அணைக்கட்டில் இருந்து குறைந்தபட்சம் 5 அடி நீா் திறந்துவிட்டு சாத்தான்குளம் திசையன்விளை பகுதி வறட்சியைப் போக்கவும், உப்புநீா் தன்மையை குறைக்கவும், குடிநீா் ஆதாரத்துக்காகவும் வெள்ளநீா் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட முதல்வருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT