தூத்துக்குடி

தட்டாா்மடத்தில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் தட்டாா்மடம் கடை வீதியில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Syndication

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் தட்டாா்மடம் கடை வீதியில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தெற்கு ஒன்றியச் செயலா் எஸ். அப்பாதுரை தலைமை வகித்தாா். ஒன்றிய எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் ஐ.டி. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். விழாவில், எம்.ஜி.ஆா். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சொக்கன் குடியிருப்பு கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவா் பாண்டியராஜன், ஒன்றிய இளைஞரணி பொருளாளா் பூல்பாண்டி, முன்னாள் மாவட்ட கவுன்சிலா் தேவ விண்ணரசி, ஒன்றிய அமைப்புசாரா ஓட்டுநா் பிரிவு செயலா் பில்லி கிரஹாம், கிளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT