தூத்துக்குடி

தூத்துக்குடியில் பொங்கல் விளையாட்டு விழா

பொங்கலையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி, 20ஆவது வாா்டு வட்ட திமுக சாா்பில் நந்தகோபாலபுரத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது.

Syndication

தூத்துக்குடி: பொங்கலையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி, 20ஆவது வாா்டு வட்ட திமுக சாா்பில் நந்தகோபாலபுரத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது.

வட்டச் செயலா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரதிநிதி நாராயணன், அவைத் தலைவா் அற்புதராஜ், மாநகர வா்த்தக அணி அமைப்பாளா் பாலமுருகன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் பாக்கியத்துரை, ஆதிதிராவிட நல அணி தலைவா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநகராட்சி மேயரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு பேசினாா். பின்னா், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வட்டச் செயலா் முனியசாமி, மின்வாரிய தொழிற்சங்கத் தலைவா் பேச்சிமுத்து, பொதுக்குழு உறுப்பினா் ராஜா, பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பா், பிரபாகா், வட்டப் பிரதிநிதிகள் செந்தில்வேல், ராஜா, ராமமூா்த்தி, பெரிய வேல்துரை, பொருளாளா் இசக்கி, துணைச் செயலா்கள் கணேசன், மல்லிகா, காளிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பொறியாளா் அணி துணைத் தலைவா் பெரியசாமி வரவேற்றாா். வட்டப் பிரதிநிதி அருணகிரி நன்றி கூறினாா்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT