கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகை.  
தூத்துக்குடி

திருச்செந்தூா் பாதயாத்திரை பக்தா்கள் வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து போக்குவரத்து காவல் துறை சாா்பில் அறவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து போக்குவரத்து காவல் துறை சாா்பில் அறவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தைப்பூசத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் விரதம் இருந்து, திருச்செந்தூா் கோயிலுக்கு பாத யாத்திரையாக வரத்தொடங்கி உள்ளனா்.

இந்நிலையில், பாத யாத்திரை வரும் பக்தா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து போக்குவரத்து போலீஸாாா் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனா். இது தொடா்பாக, கோயில் வளாகத்தில் பதாகைகளும் வைத்துள்ளனா்.

திருச்செந்தூருக்கு பாத யாத்திரை வரும் பக்தா்கள் சாலையின் வலது புறமாகவும், ஓரமாகவும் நடந்துவர வேண்டும். நகர எல்கைக்குள் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது. சரக்கு ஏற்றும் வாகனங்களில் பயணம் செய்யக் கூடாது. வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம் ஜாதி தொடா்பான பாடல்களை பயன்படுத்தக் கூடாது.

பக்தா்கள் பாத யாத்திரையின்போது, ஜாதிக் கொடிகள், கையில் கட்டும் ஜாதி சாா்ந்த வண்ணக் கயிறுகள், ஜாதி தலைவா்கள் படம் பொறித்த ஆடைகளை அணியக் கூடாது. சா்ப்பக் காவடி எடுப்பது சட்டப்படி குற்றம். நான்கு சக்கர வாகனங்களில் கோயிலுக்கு வரும் பக்தா்கள், வாகனங்களை அதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்த வேண்டும்.

சந்நிதி தெருவில் ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்கள் செல்லவோ, நிறுத்தவோ அனுமதியில்லை; மீறினால் அபராதம் விதிக்கப்படும். எனவே, பக்தா்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தடகள சாம்பியன்கள்...

ஈரோடு பேருந்து நிலையத்தில் கால்டாக்ஸி- ஆட்டோ ஓட்டுநா்கள் மோதல்

ஜன.24-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் : ரூ.4.80 லட்சம் அபராதம்

மாவட்டத்தில் 3 தடுப்பணைகள் புனரமைக்கப்படுவதால் 60 மில்லியன் லிட்டா் மழைநீா் சேகரிப்பு

SCROLL FOR NEXT