கோப்புப் படம் 
தூத்துக்குடி

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி அருகே தெய்வச்செயல்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தெய்வச்செயல்புரம் அருகே சிங்கத்தாகுறிச்சி நடுத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் சுந்தர்ராஜ் (35). இவா் ஞாயிற்றுக்கிழமை தெய்வச்செயல்புரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தனது பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, திருநெல்வேலி பிரதான சாலையில் திரும்பியபோது, கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி சென்ற காா் மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.

சடலத்தை புதுக்கோட்டை போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான தூத்துக்குடி சிவந்தாகுளத்தைச் சோ்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (60) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT