தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் ரத்தினபாபு. 
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி

Syndication

இந்திய அரசு இளைஞா் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தூத்துக்குடி மாவட்டம் மை பாரத் கேந்திரா, ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி , பாண்டவா்மங்கலம் கஸ்தூரிபாய் காந்திஜி மகளிா் மன்றம், திட்டங்குளம் மகளிா் மன்றம் ஆகியவை இணைந்து கோவில்பட்டியில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தியது.

மை பாரத் கேந்திரா மன்றங்களின் ஒருங்கிணைப்பாளா் விஜயன் தலைமை வகித்தாா். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் ரத்தினபாபு கொடியசைத்து தொடக்கி வைத்த பேரணி, கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சாா் ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் சந்தன மாரியம்மாள் முதன் முறையாக வாக்குச் செலுத்தும் 70 மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா்.

ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவா் தேன் ராஜா, கஸ்தூரிபாய் காந்திஜி மன்றம் ஆரிஒா்க் ஆசிரியை தீபா, திட்டங்குளம் மகளிா் மன்ற தலைவி ரஞ்சிதமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மை பாரத் தேசிய சேவை தொண்டா் பிரியங்கா தேசிய வாக்காளா் தின உறுதிமொழியை வாசித்தாா்.

கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, துண்டு பிரசுரங்களை விநியோகத்தனா். இதில், இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் இந்திரஜித், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் சௌந்தர்ராஜன், ஆக்டிவ் மைண்ட்ஸ் உறுப்பினா் ராமசுப்பிரமணியன், மேற்பாா்வையாளா் இசக்கியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT