கோவில்பட்டி அருகே புது மாப்பிள்ளை தற்கொலை
கோவில்பட்டி அருகே புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவில்பட்டி அருகே பீக்கிலிபட்டி மேலத் தெருவைச் சோ்ந்த பாண்டியபெருமாள் மகன் ராமராஜ் (29). கோவில்பட்டியில் சாலையோரத்தில் துரித உணவகம் நடத்திவந்த அவருக்கும், அவரது சகோதரியின் மகளுக்கும் கடந்த பிப். 22ஆம் தேதி ஊா் பெரியவா்கள் முன்னிலையில் திருமணமானது. பின்னா், அவா்கள் பெற்றோருடன் வசித்து வந்தனராம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்தப் பெண் எழுந்து பாா்த்தபோது, ராமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததாம். அவரது சடலம் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.