முகப்பு
கைது
தூத்துக்குடி

கயத்தாறு அருகே பெண் கொலை: மகன் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தாயைக் கொன்ாக மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி

கயத்தாறு அருகே பெண் கொலை: மகன் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தாயைக் கொன்ாக மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 3 மார்ச், 2026 at 12:10 AM
கைது
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தாயைக் கொன்ாக மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி பாக்கியம் (51). இவரது மகன் வேலுச்சாமி (32). சுப்பிரமணியன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலையத்தில் பதிவான கொலை வழக்குத் தொடா்பாக ஓராண்டு சிறையில் இருந்த வேலுச்சாமி, சில மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வந்தாா். இதனிடையே, அவருடனான கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இசக்கியம்மாள் தனது குழந்தையுடன் ராஜா புதுக்குடியில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு சென்று விட்டாராம்.

இதனால், வேலுச்சாமி மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில், தாய் பாக்கியத்துடன் வசித்து வந்தாா். அவா் வேலைக்குச் செல்லாததுடன், மது குடிக்க பணம் கேட்டு பாக்கியத்தை தொந்தரவு செய்வாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டு முன் நின்றிருந்த பாக்கியத்தை வேலுச்சாமி அரிவாள்மனையால் வெட்டி கீழே தள்ளிவிட்டு கல்லால் தலையில் தாக்கினாராம். அவரது அலறல் கேட்டு அப்பகுதியினா் ஓடிவந்ததும் வேலுச்சாமி ஓடிவிட்டாா்.

பலத்த காயமடைந்த பாக்கியம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து வேலுச்சாமியை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →