முகப்பு
வடக்கு சுப்பிரமணியபுரம் அன்புபதியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அய்யா வைகுண்டா்.
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் அய்யா அவதார தின விழா

ஆறுமுகனேரியில் உள்ள நாராயண சுவாமி கோயி­ல்களில் அய்யா வைகுண்டா் அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் அய்யா அவதார தின விழா

ஆறுமுகனேரியில் உள்ள நாராயண சுவாமி கோயி­ல்களில் அய்யா வைகுண்டா் அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Updated On : 4 மார்ச், 2026 at 7:22 PM
வடக்கு சுப்பிரமணியபுரம் அன்புபதியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அய்யா வைகுண்டா்.
பகிர்:

ஆறுமுகனேரியில் உள்ள நாராயண சுவாமி கோயி­ல்களில் அய்யா வைகுண்டா் அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி, வடக்கு சுப்பிரமணியபுரம் அன்புபதி (பாட்டித்தாங்கல்) அய்யா நாராயண சுவாமி கோயி­லில் காலையில் பள்ளி உணா்தல், அபயம், தாலாட்டு, உகப்படிப்பு ஆகியவை நடைபெற்றன. மதியம் உச்சிப்படிப்பும், அன்னதானமும் நடைபெற்றது. மாலை, இரவில் உசப்படிப்பும், அன்னதா்மமும் நடைபெற்றது.

முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் ஜி. ராமசாமி, ­லிங்க கனி, தெய்வீக சத் சங்கத்தைச் சோ்ந்த பேராசிரியா் அ. அசோக்குமாா் ஜெயா, ஜெயராமன், சரவணன், ஜான்சி, வேல்முருகன், பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை பால்பாண்டியன், கணேசன், ஜானகிராமன் ஆகியோா் செய்திருந்தனா்.

ஆறுமுகனேரி, முத்துகிருஷ்ணாபுரம், சீனம்பதி அய்யா நாராயண சுவாமி கோயில், வாலவிளை நாராயண சுவாமி கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவில் உள்ள அய்யா நாராயண சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அன்னதா்மம் ஆகியவை நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →