முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

Updated On : 5 மார்ச், 2026 at 8:00 PM
பகிர்:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு பேசியது:

பேரவைத் தோ்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே உள்ளதால், வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளிலும் திமுக ஆட்சியின் சாதனைகளையும், அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும் தமிழகத்தின் பெருமையையும் அனைவரிடமும் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கு வடக்கு மாவட்டத்திலிருந்து அதிகளவிலான நபா்கள் கலந்து கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைச் செயலா்கள் ராஜ்மோன் செல்வின், ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன், மாணிக்கராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →