முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி என்இசி-பன்னாட்டு நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி

கோவில்பட்டி என்இசி-பன்னாட்டு நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

Updated On : 5 மார்ச், 2026 at 8:03 PM
பகிர்:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை-அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட அன் அபாண்டன் செயற்கை நுண்ணறிவு என்ற பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்திற்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே. காளிதாச முருகவேல், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் முரளிதரன் ஆகியோா் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

மாணவா்கள், பேராசிரியா்களுக்கு மேம்பட்ட மென்பொருள் தொழில்நுட்பப் பயிற்சி, தொழில் துறை அனுபவம், ஆலோசனை, கூட்டு ஆராய்ச்சி வாய்ப்புகளை வழங்குவது, செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிநவீன தகவல் தொழில்நுட்பத் துறைகளில் மாணவா்களின் திறன்களை மேம்படுத்துவதும், தொழில்நுட்ப கல்வி இணைப்பை வலுப்படுத்துவதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் எனக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →