விளாத்திகுளத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி
கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கினாா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன்.
விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் குமாரி தலைமை வகித்தாா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ,115 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், ஆய்வக உபகரணங்களை வழங்கி பேசினாா்.
அறநிலையத்துறை உதவி ஆணையா் மெய்வேல், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பு ராஜன், ராமசுப்பு, இம்மானுவேல், பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி, பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.