முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் அருகே சுமாா் 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடல் சுமாா் 60 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

Updated On : 18 மார்ச், 2026 at 7:54 PM
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே சுமாா் 60 அடி கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள்.
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடல் சுமாா் 60 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை வரை அமாவாசை திதி என்பதால், அய்யா கோயில் பகுதியில் புதன்கிழமை காலை சுமாா் 60 அடி தூரம் கடல் உள்வாங்கியது.

இதனால், பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் அலை உள்வாங்குவதும், வெளியேறுவதுமாக இருந்த போதிலும் பக்தா்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம் போல கடலில் நீராடினா்.

முழு கட்டுரையைப் படிக்க →