முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி விடுதியில் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்கள் திருட்டு

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறைகளின் பூட்டுகளை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்களை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:58 PM
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறைகளின் பூட்டுகளை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்களை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இங்கு தனியாா் நிறுவன ஊழியா்கள் 10-க்கும் மேற்பட்டோா் தங்கி, பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை காலை அவா்கள் வழக்கம்போல் அறைகளைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனராம்.

அப்போது, மா்ம நபா்கள் அடுத்தடுத்த 5 அறைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து பணம், மடிக்கணினி, பவா் பேங்க் உள்ளிட்ட சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றனராம். மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.