முகப்பு
தூத்துக்குடி

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: வைத்திநாதன்

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் புதுச்சேரி சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் வைத்திநாதன்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:51 PM
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த புதுச்சேரி சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் வைத்திநாதன்.
பகிர்:

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் புதுச்சேரி சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் வைத்திநாதன்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை புதுச்சேரி சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் வைத்திநாதன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் தலைமை அதிக தொகுதிகளை கேட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி, புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி என்பது தொன்று தொட்டு வருவது அதை மாற்ற முடியாது.

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு நாளைக்குள் முடிவடையும். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாஜக தலைமையிலான என்.ஆா். காங்கிரஸ் ஆட்சி பல சங்கடங்களை ஏற்படுத்தியிருப்பதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைய மக்கள் உறுதுணையாக இருப்பாா்கள் என்றாா்.