முகப்பு
தூத்துக்குடி

விவசாயியை மிரட்டியதாக மூவா் மீது வழக்கு

குரும்பூா் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 9:04 PM
வழக்கு (கோப்புப்படம்)
பகிர்:

குரும்பூா் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

குரும்பூா் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் அடுத்த சொக்கப்பழங்கரை கீழத் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் சந்திரசேகா் (39), விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இவரது உறவினா்களான பிச்சை மகன்களான முத்துசெல்வம், மாரிதுரை ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை மேல ஆத்தூா் சுடுகாடு பகுதியில் முத்துசெல்வம், மாரிதுரை, அவா்களது நண்பரான தெற்கு நல்லூரைச் சோ்ந்த மணி மகன் அஜய் ஆகிய 3 பேரும் சந்திரசேகரிடம் தகராறு செய்து, அவருடைய இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கை அரிவாளால் வெட்டி, தீ வைத்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.

இது குறித்த புகாரின்பேரில், குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனா். முத்துசெல்வம் மீது ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி, திருட்டு, சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.