கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி-கடலையூா் சாலையில் லிங்கம்பட்டி விலக்கு அருகேயுள்ள தனியாா் கிணற்றில், கோவில்பட்டி சரமாரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவகுமாா் மகன் மனோஜ் (17) உள்ளிட்ட 3 போ் குளிக்கச் சென்றனராம். அப்போது, மனோஜ் நீரில் மூழ்கிவிட்டாராம்.
தகவலின்பேரில், தீயணைப்பு நிலையத்தினா் சென்று தேடி, அவரை சடலமாக மீட்டனா். சடலத்தை நாலாட்டின்புதூா் போலீஸாா் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.