தூத்துக்குடியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி, கீழ அலங்காரத் தட்டு பகுதியில் உள்ள வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 640 கிலோ விரலி மஞ்சள், 165 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகா், கீழ அலங்காரத் தட்டு பகுதியில் மஞ்சள், பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, க்யூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜய் அனிதா தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆரோக்கிய மேரி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 640 கிலோ விரலி மஞ்சள், 165 கிலோ பீடி இலைகளைப் பறிமுதல் செய்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னா், கைப்பற்றப்பட்ட மஞ்சள், பீடி இலைகள் சுங்கத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.