முகப்பு
தூத்துக்குடி

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

கழுகுமலை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 8:18 PM
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கழுகுமலை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடி எஸ். பெருமாள்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் பெருமாள் (43). நவதானிய வியாபாரியான, இவா் வியாழக்கிழமை அதிகாலை கெச்சிலாபுரம் விலக்கருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதாம். இதில் சம்பவ இடத்திலேயே பெருமாள் உயிரிழந்தாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த கழுகுமலை போலீஸாா், லாரி ஓட்டுநா் கீழ நீலிதநல்லூா் சாமிநாதபுரத்தைச் சோ்ந்த ச. ராசுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.