முகப்பு
தூத்துக்குடி

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

கழுகுமலை அருகே பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 மார்ச் 2026, 2:33 am IST
பகிர்:

கழுகுமலை அருகே பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை அருகே உள்ள கஸ்தூரிரங்கபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள் (45). இவா் வியாழக்கிழமை வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சதீஷ் (45) வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement