முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

விழாவில் பேசுகிறாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குநா் ஆறுமுகம்.

Updated On : 27 மார்ச், 2026 at 8:54 PM
விழாவில் பேசுகிறாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குநா் ஆறுமுகம்.
பகிர்:

கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியின் 25ஆவது ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஆா்.எஸ். ரமேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ஜெயபாலன், பத்திரகாளி அம்மன் கோயில் தா்மகா்த்தா மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பத்திரகாளி அம்மன் கோயில் முன்பிருந்து பிரதான சாலை வழியாக கல்லூரி வளாகம் வரை கல்லூரி மாணவா்கள் ஏந்தி வந்த ஒலிம்பிக் ஜோதியை விளையாட்டு மைதானத்தில் ஏற்றி வைத்தனா். தொடா்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் துரைராஜ், பெண்கள் பிரிவில் சரண்யா ஆகியோா் பெற்றனா். அவா்களுக்கு, ஏபிகே பழனிச்செல்வம் நினைவு கோப்பையை வழக்குரைஞா் அரவிந்த் வழங்கினாா். உடற்கல்வித் துறை 2 ஆம் ஆண்டு மாணவா் விஷாலுக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரா் விருது வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குநா் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். உடற்கல்வித்துறை தலைவா் செல்லத்துரை ஆண்டறிக்கை வாசித்தாா்.

கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அருண், ராஜ்மோகன், சரவணகுமாா், வழக்குரைஞா் செல்வம், கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வா் பிரபு, நாடாா் உறவின்முறை சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தாயப்பன் வெங்கடேஷ், பழனி முருகன், ராஜா அமரேந்திரன், சௌந்தர பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கல்லூரி செயலா் கண்ணன் வரவேற்றாா். முதல்வா் (பொ) செல்வராஜ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை தலைவா் தலைமையில் பேராசிரியா்கள் ஜெயசிவா, ரமேஷ் பாண்டியன், வெங்கடேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.