முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 56.19 லட்சம் பறிமுதல்

Updated On : 29 மார்ச், 2026 at 5:58 PM
பணம் பறிமுதல் - (கோப்புப் படம்)
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் காவல் துறையால் ஞாயிற்றுக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ. 56,19,520 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 6 பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, காவல் துறை, மதுவிலக்கு காவல் துறை ஆகியோரால் ஞாயிற்றுக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ. 56,19,520 ரொக்கம், ரூ. 9,76,300 மதிப்பிலான பரிசுப் பொருள்கள், ரூ. 2,35,792 மதிப்பிலான மதுபானங்கள், ரூ. 5,93,100 மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததையடுத்து ரூ. 51,26,505 ரொக்கம் விடுவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.