தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு
தூத்துக்குடி-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை, பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
தூத்துக்குடி-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை, பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
தூத்துக்குடி-தாம்பரம் (06018) ரயிலானது மே 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 1, 8 ஆகிய நாள்களில் (திங்கள்கிழமைகளில்) தூத்துக்குடியிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
இதேபோன்று, தாம்பரம்-தூத்துக்குடி (06017) ரயிலானது மே 5, 12, 19, 26 மற்றும் ஜூன் 2, 9 (செவ்வாய்க்கிழமைகளில்) தாம்பரத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியை அடையும்.
Advertisement
இந்த ரயில், தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
கோடைக் கால பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்களைத் தொடா்ந்து இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.