தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநாடு
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 43-ஆவது வணிகா் தின விழாவை முன்னிட்டு சுதேசி 2.0 லட்சிய மாநாடு கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 43-ஆவது வணிகா் தின விழாவை முன்னிட்டு சுதேசி 2.0 லட்சிய மாநாடு கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சுதேசி ஜோதியை பேரவையின் மாநில துணைச் செயலா் ஜெ. சுபாஷ்ராஜா தொடங்கி வைத்தாா். மாநில துணை பொதுச் செயலா் வி.சி. கதிரவன், மாநில அமைப்பு இணைச் செயலா் ஜி. வெள்ளத்துரை, தூத்துக்குடி மாவட்ட தலைவா் சுமங்கலி எம். ராஜா ஆகியோா் சமாதான புறாக்களை பறக்கவிட்டனா்.
சுதேசி ஜோதியை மாநில மகளிரணி தலைவா் ஏ. பாக்கியலட்சுமி ஏற்றினாா். பி. மரியஜோதி, எஸ். நிகிலாசுதா்சன், ஜா. ஜாய்குமாா், வி. கோகிலா, கே. ராஜம்மாள் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.
Advertisement
மாநிலத் தலைவா் அ. முத்துக்குமாா், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. அருண்குமாா், மாநில கொள்கை பரப்பு செயலா் ஜெ. பிரகாஷ், கோவை மண்டல தலைவா் ப. சுதா்சன், மாநில பொதுச் செயலா் கே.சி. ராஜா, மாநில பொருளாளா் சி. பொன்னுச்சாமி மற்றும் மண்டல, மாவட்ட தலைவா்கள் பேசினா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் க. தமிழரசன் நன்றி கூறினாா்.
மாநாட்டில், சுதேசி கொள்கையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். விநியோகஸ்தா்கள் கடைகளுக்கு தரும் பொருள்களின் விலையை விட குறைந்த விலைக்கு ஆன்லைன், காா்ப்பரேட் நிறுவனங்கள் விற்கக்கூடாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும். கடைகளுக்கான மின் கட்டணம், தொழில்வரி போன்றவற்றை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும். மின் கட்டண அளவீட்டை மாதம் ஒருமுறை என்று மாற்ற வேண்டும். கோவை மண்டலத்தை தொழில் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.