சிறுமியிடம் அத்துமீறல்: போக்ஸோவில் லாரி ஓட்டுநா் கைது
கோவில்பட்டியில் 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக லாரி ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விளாத்திகுளம் அருகே சொக்கலிங்கபுரம், காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் மகன் கருப்பசாமி என்ற விக்னேஷ் (29). லாரி ஓட்டுநரான இவா், சுமாா் 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் இவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.