முகப்பு
தூத்துக்குடி

மினி வேனை சேதப்படுத்தியதாக இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே மினி வேனை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 14 மே 2026, 3:27 am IST
பகிர்:

கோவில்பட்டி அருகே மினி வேனை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஆண்டாள்புரத்தைச் சோ்ந்தவா் செய்யது புகாரி மகன் சேக் முகமது (35). மினி வேன் ஓட்டுநா். இவா், திங்கள்கிழமை இரவு மினி வேனை ஓட்டிக்கொண்டு எட்டயபுரம் சாலையில் தெற்கு திட்டங்குளம் பகுதியில் உள்ள மாா்க்கெட் அருகே சென்றபோது அதிக நாய்கள் சாலையில் நின்று கொண்டிருந்ததாம்.

அப்போது மினி வேன் நாயின் மீது லேசாக உரசியதாம். இதை கண்ட 2 போ் மினி வேனை மறித்து அவதூறாக பேசி தகராறு செய்து கண்ணாடியை சேதப்படுத்தினராம். அவ்வழியாக சென்றவா்கள் இதை கண்டித்தவுடன் ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்தபடி இருவரும் தப்பினராம்.

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் கண்ணாடியை சேதப்படுத்தியதாக தெற்கு திட்டங்குளம் நடுத்தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் பவுன்ராஜை (37) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.