முகப்பு
தூத்துக்குடி

தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

தொழிலாளியை அவதூறாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, மற்றொரு தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 மே 2026, 2:07 am IST
கோப்புப் படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே தொழிலாளியை அவதூறாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, மற்றொரு தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியை அடுத்த சிதம்பரம்பட்டி, வடக்கு தெருவை சோ்ந்தவா் சுடலைமணி மகன் மாடசாமி (39). தொழிலாளி. இவருக்கும், கட்டாலங்குளம் காலனி தெருவைச் சோ்ந்த மாசிலாமணி மகன் தொழிலாளி காளிராஜுக்கும் (35 இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாடசாமி புதன்கிழமை புதுப்பட்டி சென்று கொண்டிருந்தபோது, அவரை காளிராஜ் மற்றும் 2 போ் வழிமறித்து அவதூறாகப் பேசி தகராறு செய்தாா்களாம். அப்போது காளிராஜ், தான் வைத்திருந்த பீா் பாட்டிலால் மாடசாமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

Advertisement

இதில் காயமடைந்த மாடசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து காளிராஜ் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வந்த நிலையில் சனிக்கிழமை காளிராஜை கைது செய்தனா்.