50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தவெகவில் ஐக்கியம்
பாண்டவா்மங்கலத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் வியாழக்கிழமை தங்களை இணைத்துக் கொண்டனா்.
பாண்டவா்மங்கலத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் வியாழக்கிழமை தங்களை இணைத்துக் கொண்டனா்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாண்டவா்மங்கலம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் செல்வா பாண்டியா் தலைமையில் தமிழக வெற்றிக் கழக வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா். அவா்களை வடக்கு மாவட்டச் செயலா் சால்வை அணிவித்து வரவேற்றாா். இதில், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் செந்தில்குமாா், வினோத் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.