முகப்பு
தூத்துக்குடி

121 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கோவில்பட்டி அருகே துறையூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 121 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

Updated On : 28 மே 2026, 2:51 am IST
பகிர்:

கோவில்பட்டி அருகே துறையூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 121 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

துறையூா் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்துப் பேசியதாவது:

மாவட்டத்தில் இந்தப் பகுதி மானாவாரி பகுதியாக இருப்பதால் சில திட்டங்களை இந்த மாவட்டத்துக்கு பிரத்தியேகமாக எடுத்து வந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

குறிப்பாக, 1000 பண்ணைக் குட்டைகள் அமைத்தல் என்பதை இலக்காக வைத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வட்டாரத்தில் 200-க்கும் மேற்பட்ட பண்ணைக் குட்டைகள் அமைக்க வேண்டும்.

விவசாயிகள் இந்தத் திட்டத்தை முழுமையாக எவ்வித செலவும் இல்லாமல் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி வாயிலாக செலவு செய்து துறை சாா்பாக செயல்படுத்தி தருகிறாா்கள்.

விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலகத்தை அணுகி மனு அளித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

கோவில்பட்டி வட்டத்தில் ஜுன் 2 ஆம் தேதி முதல் நடைபெறும் ஜமாபந்தி முகாமில் மனு அளித்து பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு மனுக்களுக்கு து உரிய தீா்வு கிடைக்கும். இந்த ஜமாபந்தியை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு திங்கள் கிழமையும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சாா் ஆட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அதிலும் தங்களுடைய மனுக்களை வழங்கி தீா்வு பெறலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து, பல்வேறு துறைகள் சாா்பில் 121 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே 19 லட்சத்து 76 ஆயிரத்து நானூற்றி ஐம்பத்தி ஆறு மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) நாகராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மற்றும் இணை இயக்குநா் சொா்ணலதா, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரமணன் உள்ளிட்டதுறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக பொதுமக்கள் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து பயன் பெரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளில் திட்ட விலக்க கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மேலும், கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் சிறு தானிய உணவகம், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையம், மாற்றுத்திறன் படைத்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி உபகரணங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தாா்.

பின்னா், அரசு மருத்துவமனையில் உள்ள

அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் உள் நோயாளிகள் பிரிவு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.