திருச்சி

திருச்சி மாநகர் விபத்துகளில் அரசுப் பேருந்துகளில்தான் உயிரிழப்பு அதிகம்

திருச்சி, மே 4:   திருச்சி மாநகரில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளில் தனியார் பேருந்துகளைவிடவும், அரசுப் பேருந்துகளில்தான் உயிரிழப்பு அதிகம் நேர்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.   தகவல் அறியும் உ

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, மே 4:   திருச்சி மாநகரில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளில் தனியார் பேருந்துகளைவிடவும், அரசுப் பேருந்துகளில்தான் உயிரிழப்பு அதிகம் நேர்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் திருச்சி வட்டார அமைப்பாளர் வி. ராமதாஸ் கேட்டுப் பெற்ற விபத்துகள் குறித்த விவரங்களில்தான் இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது.

  2000-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி தொடங்கி 2010 மார்ச் 1-ம் தேதி வரை திருச்சி மாநகரில் ஏற்பட்ட விபத்துகள் குறித்து மாநகரக் காவல் துணை ஆணையர் அலுவலகம் அளித்துள்ள விவரங்கள்:

 திருச்சி மாநகரில் இயங்கும் தனியார் பேருந்துகளால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகள் 739. இவற்றில் வடக்கு சரகத்தில் 85 உயிரிழப்புகளும், தெற்கு சரகத்தில் 76 உயிரிழப்புகளும் (மொத்தம்- 161) நேர்ந்துள்ளன. வடக்கு சரகத்தில் பெரிய காயம் ஏற்பட்ட நபர்கள் 134, தெற்கு சரகத்தில் பெரிய காயம் ஏற்பட்ட நபர்கள் 72 (மொத்தம்- 206). அதேபோல, வடக்கு சரகத்தில் சிறிய காயம் ஏற்பட்ட நபர்கள் 259, தெற்கு சரகத்தில் சிறிய காயம் ஏற்பட்ட நபர்கள் 208 (மொத்தம்- 467).

  திருச்சி மாநகரில் இயங்கும் அரசுப் பேருந்துகளால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகள் 738. இவற்றில் வடக்கு சரகத்தில் 91 உயிரிழப்புகளும், தெற்கு சரகத்தில் 113 உயிரிழப்புகளும் (மொத்தம்- 204) நேர்ந்துள்ளன. வடக்கு சரகத்தில் பெரிய காயம் ஏற்பட்ட நபர்கள் 96, தெற்கு சரகத்தில் பெரிய காயம் ஏற்பட்ட நபர்கள் 104 (மொத்தம்- 200). அதேபோல, வடக்கு சரகத்தில் சிறிய காயம் ஏற்பட்ட நபர்கள் 168, தெற்கு சரகத்தில் சிறிய காயம் ஏற்பட்ட நபர்கள் 420 (மொத்தம்- 588).

காற்று ஒலிப்பான்: திருச்சி மாநகரில் ஓடும் தனியார் பேருந்து ஓட்டுநர்களும், அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தும் வகையிலும், கூட்டத்தைக் கலைக்கும் வகையிலும் வாகனங்களை ஓட்டுகின்றனர். அப்படி இயக்கும் வாகன ஓட்டிகள் மீது காற்று ஒலிப்பான் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதத் தொகையை வசூல் செய்து மாநகரக் காவல் அலுவலகத்தில் செலுத்தப்படுகிறது. மேலும், அவ்வப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுடன் மாநகரக் காவல் துறை இணைந்து சிறப்பு தணிக்கை நடத்தி காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

பாடல்கள் ஒலிபரப்பு: திருச்சி மாநகரில் தனியார் பேருந்துகளிலும், டேப் ரிக்கார்டர் வைத்து ஒலிக்கும் பேருந்துகள் மீது வாகன வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது.

மோட்டார் பொருத்திய ரிக்ஷா: மோட்டார் பொருத்திய தட்டு ரிக்ஷாக்கள் திருச்சி மாநகரத்தில் ஓட்ட அனுமதி கிடையாது. மீறும் மோட்டார் பொருத்திய தட்டு ரிக்ஷாக்களைப் பிடித்து, அவற்றின் மோட்டார்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன.

  மோட்டார் பொருத்திய ரிக்ஷாக்களால் இதுவரை தெற்கு சரகத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். மற்றொரு விபத்தில் ஒருவருக்கு சிறிய காயமும் ஏற்பட்டுள்ளது. வடக்கு சரகத்தில் ஒரு விபத்து நேர்ந்துள்ளது. இதில் ஒருவருக்கு மட்டுமே பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.

  இவ்வாறு மாநகரக் காவல் துணை ஆணையர் அலுவலகத்திலிருந்து அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன. அரசுப் பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளால் மட்டுமே எப்படி உயிரிழப்பு எண்ணிக்கையும், சிறிய காயங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது? சில அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் கூறியவை:

  "கணக்கு என்ற அளவில் இந்தப் புள்ளிவிவரங்கள் சரியாக இருக்கும். ஆனால், நடைமுறையில் இது சரியாக இருக்காது. ஏனென்றால், மாநிலத்தில் தற்போது 20 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன. தனியார் பேருந்துகள் வெறும் 7 ஆயிரம் மட்டுமே. இதன்அடிப்படையில் பார்த்தால், அரசுப் பேருந்துகளால் நிகழும் விபத்துகளின் விகிதம் குறைவுதான்.

  அடுத்து, பெரும்பாலும் தனியார் பேருந்துகள் விபத்து நேர்ந்தவுடன் "பேச்சுவார்த்தையில்' முடித்துவிடுகின்றனர். இதனால், இயல்பாகவே காவல் துறையில் வழக்குப் பதிவு குறைவாக இருக்கும்.

  மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 12 ஆண்டுகளாக பராமரிப்புப் பணிகளுக்கான தொழில்நுட்பப் பணிக்கு ஆள் எடுக்கவே இல்லை. மாநிலத்தில் 17 ஆயிரம் பேருந்துகள் ஓடிய காலத்தில் இருந்த தொழில்நுட்பப் பணியாளர்கள்தான் இப்போது 20 ஆயிரம் பேருந்துகள் ஓடும் போதும் இருக்கின்றனர்.

  இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, தனியார் பேருந்துகள்தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றன. அரசு இன்னும் கூடுதலாகக் கவனம் செலுத்துமானால் எங்களாலும் விபத்தின்றி, உயிரிழப்பின்றி பேருந்துகளை இயக்க முடியும்' என்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT