திருச்சி

நீடாமங்கலம் நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படுமா?

நீடாமங்கலம், அக். 27: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் நூலகத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.   நீடாமங்கலத்

எஸ். சந்தானராமன்

நீடாமங்கலம், அக். 27: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் நூலகத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  நீடாமங்கலத்தில் 1963-ம் ஆண்டு முதல் நூலகம் இயங்கி வருகிறது. நூலகத்திற்கான சொந்த கட்டடம் இல்லாத நிலையில், நீடாமங்கலம் வடக்கு வீதியில் சீனிவாசபிள்ளைச் சத்திரத்தில் அந்தக் கட்டடத்தின் உரிமையாளர்களான ராமு தேவர், தியாகராஜப்பிள்ளை சகோதரர்கள் வாடகையின்றி  நூலகம் இயங்க இடம் தந்தனர்.

   அதேபோல, மளிகைக் கடை நடத்திய கோவிந்தராஜ் தனது செலவில் நூலகத்திற்கு மின் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். பல ஆண்டுகள் வாடகை இன்றி நூலகம் அந்தக் கட்டடத்தில் இயங்கி வந்தது. மேலும், அந்த நூலகம் ஊரின் முக்கிய இடத்தில் அமைந்திருந்ததால் நூல்கள் படிக்கும் ஆர்வலர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

   பின்னர் பல இடங்களுக்கு மாறிய இந்த நூலகம், நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயில் எதிரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட சொந்தக் கட்டடத்தில் இயங்கியது. இது நகர்புறத்திலிருந்து சற்று ஒதுக்குப்புறமான இடமாக உள்ளது.    2,800 உறுப்பினர்களைக் கொண்ட இந்த நூலகத்தில், சுமார் 26,000 நூல்கள் உள்ளன. நூலகர் ஒருவரும், இரு உதவியாளர்களும் இங்கு பணிபுரிகின்றனர். தலா ஆயிரம் ரூபாய் வீதம் 28 புரவலர்கள் கொடை வழங்கியுள்ளனர்.

  நாள்தோறும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் என சுமார் 200 பேர் நூலகத்திற்கு வந்து நூல்களைப் படித்து பயன்பெறுகின்றனர். தற்போது வட்ட தலைமையிட நூலகம் என்ற தகுதியையும் இந்த நூலகம் பெற்றுள்ளது.

  இந்த நூலகத்தின் கிளை பெரம்பூர் ஊராட்சியிலுஹம் உள்ளது.

 மேலும், தற்போது இரு கணினிகளுடன், இணையதள வசதியும் செய்யப்பட்டுள்ளது. பலருக்கும் பயனுள்ள வகையில் இயங்கி வரும் இந்த நூலகம் 2013-ம் ஆண்டு தனது பொன்விழாவை கொண்டாட உள்ளது.   ஆனால், இந்த நூலகக் கட்டடம் நாள்தோறும் நூல்கள், புத்தகங்களைப் படிக்க வரும் வாசகர்கள், நூலகத்தை பயன்படுத்தும் உறுப்பினர்கள் என அனைவரும் வந்து செல்ல, பயன்படுத்த போதுமானதாக இல்லை.

   எனவே, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன புதிய நூலகக் கட்டடத்தை கட்டித் தர அரசு முன்வர வேண்டும் என்பதே நூலக ஆர்வலர்களின் விருப்பமாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

வைரலில் மிரட்டும் அனிருத்தின் பின்னணி இசைகள்!

மதுரையில் தடையில்லா குடிநீர் வழங்கப்படுவதாக பொய்யான தகவல்: முதல்வருக்கு செல்லூர் ராஜு கோரிக்கை

தவறான திட்டமிடலால் தடம்புரளும் ரயில் பயணிகள் நிலை! என்னதான் பிரச்னை?

SCROLL FOR NEXT