முகப்பு
திருச்சி

போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

கரூர், ஜன. 8: கரூர் மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சார்பில் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் மைய நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.    நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட துணை ஆட்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

கரூர், ஜன. 8: கரூர் மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சார்பில் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் மைய நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

   நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட துணை ஆட்சியர் (பயிற்சி) எஸ். சூரியபிரகாஷ் சிறப்புரையாற்றினார்.

   அரசுப் பணி என்பது என்ன,  டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளின் வகைகள், போட்டித் தேர்வுக்கு எவ்வாறு தயாராவது, அவற்றை எப்படி எதிர்கொள்வது, ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் படிப்பது, படித்தவற்றை எவ்வாறு ஞாபகம் வைத்துக் கொள்வது என மாணவர்களுக்கு அவர் விளக்கம் அளித்தார்.

   மேலும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை நன்றாக படித்தால் போதுமானது. மேலும், ஒவ்வொரு துறை வாரியாகவும் தனித்தனிப் புத்தகங்களை படிக்க வேண்டும். படித்தவற்றை மறந்து விடாத அளவிற்கு தொடர்ந்து பயிற்சியின் மூலமாக அவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

   தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் துணை ஆட்சியர் விளக்கம் அளித்தார்.

   நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் ஜெ. கார்த்திகேயன், மாவட்ட மைய நூலகர் செ.செ. சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் ச. சேதுபதி வாழ்த்திப் பேசினார். வாசகர் வட்ட ஆலோசகர் ஆசிரியர் ஆர். ராஜேந்திரன் வரவேற்றார். பிஎஸ்என்எல் துணைக் கோட்டப் பொறியாளர் வி. விமலாதித்தன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →