திருச்சி

மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுமா?

வேதாரண்யம், ஜன. 24: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது தொடர்ந்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ள மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடலோர

கே.பி. அம்​பி​கா​பதி

வேதாரண்யம், ஜன. 24: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது தொடர்ந்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ள மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடலோரக் கிராமங்களில் வலுவடைந்து வருகிறது.

  கச்சத்தீவு பகுதி தொடங்கி, கோடியக்கரைக்கு அருகேயுள்ள மீன் இனப்பெருக்கப் பரப்பாக அடையாளம் காணப்பட்டுள்ள (பெட்ரோ பாங்க்) பகுதி வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதி, தமிழகத்தின் கிழக்கு கடலோர மீனவர்களின் முக்கிய மீன்பிடித் தளமாக உள்ளது.

  பல்வேறு காரணங்களால் கடல் மீன்வளம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், எஞ்சியுள்ள இந்தப் பகுதி மட்டும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்கிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பகுதி, தமிழக மீனவர்களுக்கு பிரச்னைக்குரிய இடமாக மாறியுள்ளது.

  இதனால் அச்சமடையும் மீனவர்கள் பலர் கரைவலைகள் விரித்து மீன் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

   இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு இதுவரை 500-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் பலியாகியுள்ளனர். இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் பயனளிக்கவில்லை. இந்தியா- இலங்கை அரசுகளுக்கு இடையே செய்துகொண்ட ஒப்பந்தங்கள் கேள்விக்குறியாகிவிட்டன.

  புதிய கோணத்தில் தாக்குதல்: மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று வரும் இலங்கைக் கடற்படையினர், கடந்த வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர் பாண்டியனை மார்பில் சுட்டுக் கொன்றனர்.

   இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார் கயிற்றில் சுருக்கிட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. தடயங்களை மறைப்பதற்காகவே இலங்கைக் கடற்படையினர் ஆயுதத் தாக்குதலைக் கைவிட்டு, புதிய முறைகளைக் கையாள்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

   நிவாரணம் தீர்வாகாது: இலங்கையில் நடந்து முடிந்த போராளிகளுக்கு எதிரான சண்டைக்குப் பிறகு, அந்த நாட்டுடனான உறவுகளை மத்திய அரசு வலுப்படுத்திக்கொள்ள தயாராகிவிட்ட நிலையில், மின்சாரம், ராணுவம் சார்ந்த உதவிகளை வெளிப்படையாகவே அளித்து வருகிறது.

  மத்திய அரசின் இந்தக் கொள்கை நிலைப்பாட்டுக்கு இடையே, தாக்குதலைத் தடுப்பது தொடர்பான தமிழக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள் பெயரளவில் மட்டுமே உள்ளன.

  இதனால், மீனவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியாக, உயிரிழக்கும் மீனவர் குடும்பத்துக்கான நிவாரணத்தை ரூ. 5 லட்சமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மீனவர்களிடையே இப்போது எதிர்ப்பு நிலை உருவாகியுள்ளது.

   உதாரணமாக, கடந்த சனிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்ட வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கு அரசின் நிவாரணத்தை அவரது கிராமத்தில் உள்ள வீட்டுக்குச் சென்று வழங்குவதில் ஏற்பட்ட தேக்க நிலையைக் குறிப்பிடலாம்.

   முன்னதாக, நிவாரணத்தை மீனவர்கள் மறுக்கப் போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, நாகை, திருவாரூர் மாவட்ட போலீஸôர் ஏராளமாகக் குவிக்கப்பட்டனர். அத்துடன், உயிரிழந்த மீனவரின் குடும்பத்தார் மருத்துவமனைக்கே அழைத்து வரப்பட்டனர்.

   உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், தமிழக முதல்வரின் படத்துடன் காசோலை வைக்கப்பட்டிருந்த உறையை இறந்த மீனவரின் மனைவியிடம் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் நீட்டினர். கடைசிவரை அதைத் தனது கையால் வாங்காமல் அழுதுகொண்டிருந்தார் ஜெயக்குமாரின் மனைவி.

  தற்காப்பு பயிற்சி அவசியம்: வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தாக்குதலை எதிர்கொள்ள மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்திப் பேசினர்.

  இதுகுறித்து வெள்ளப்பள்ளம் ஊராட்சித் தலைவர் ஜெயா சுப்பிரமணியன் கூறியது:

   இலங்கைக் கடற்படையின் தாக்குதல் அத்துமீறிவிட்டது. இந்தியக் கடற்படையின் கண்காணிப்பானது மீனவர்களின் பாதுகாப்புக்கு ஏற்றதாக அமைய வேண்டும். அண்மைக் காலமாக நடக்கும் தாக்குதல் சம்பவங்களை இலங்கைக் கடற்படை மறுத்து வருகிறது. இதனால், உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறினால், தாக்குதலை எதிர்கொள்ள மீனவர்களுக்கு தாற்காப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றார் அவர்.

  எனவே, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுப்பது மீனவர்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் ஏற்றதாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT