முகப்பு
திருச்சி

சிறப்பு எஸ்.ஐ.க்களின் குறை களையப்படுமா?

பேராவூரணி, ஜூன் 20:   தமிழக காவல் துறையில் தலைமைக் காவலர்களாக இருந்து சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டவர்களில் 35 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்க வேண்டுமென கோரிக

திருச்சி

சிறப்பு எஸ்.ஐ.க்களின் குறை களையப்படுமா?

பேராவூரணி, ஜூன் 20:   தமிழக காவல் துறையில் தலைமைக் காவலர்களாக இருந்து சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டவர்களில் 35 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்க வேண்டுமென கோரிக

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:52 PM
பகிர்:

பேராவூரணி, ஜூன் 20:   தமிழக காவல் துறையில் தலைமைக் காவலர்களாக இருந்து சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டவர்களில் 35 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    தமிழகக் காவல் துறையில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் பணியிடங்கள் குறிப்பிட்ட கால பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்தது.

   கடந்த திமுக ஆட்சியில் 25 ஆண்டுகள் பணி முடித்த தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 25 ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்த அனைத்து தலைமைக் காவலர்களும் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

  1976 ஆம் ஆண்டிலிருந்து பணியில் சேர்ந்தவர்களுக்கும், 1986 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஒரே ஊதியம், ஒரே தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

  மேலும், 15 ஆண்டுகள் பணி முடித்த மகளிர் காவலர்களுக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.  35 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கும், 15 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கும் ஒரே தகுதியில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ள 35 ஆண்டுகள் பணி முடித்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களது பணிக் காலத்திற்கு ஏற்ற வகையில் பணி உயர்விலோ, ஊதிய உயர்விலோ வேறுபாடு இருக்க வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  இதுகுறித்து 35 ஆண்டுகள் பணி முடித்து சிறப்பு உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்ற ஒருவர் கூறியது:

  கடந்த திமுக ஆட்சியில் தலைமைக் காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு செய்யப்பட்டாலும், எங்களது பணிக் காலத்தை கணக்கில் கொள்ளாமல் பதவி உயர்வு அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டது முறையற்றது.  25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி புரிந்தவர்களுக்கு தகுதித் தேர்வு வைத்தாவது உதவி ஆய்வாளர் பணி வழங்க வேண்டும். 35 ஆண்டுகள் பணி முடித்தும் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு செய்யப்பட்டிருந்தாலும், இப்பொழுதும் தலைமைக் காவலர் பணியை மட்டுமே செய்யும் நிலையில் உள்ளோம்.   வருவாய் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தவர்கள் தங்களது பணிக் காலத்தில் பதவி உயர்வு பெற்று வட்டாட்சியர் பதவியை அடைகின்றனர். காவல் துறையில் மட்டும் காவலர் மற்றும் தலைமைக் காவலர்களுக்கான பதவி உயர்வு காலதாமதமாக அளிக்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து பதவி உயர்வு பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்க வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →