முகப்பு
திருச்சி

குறைகேட்பு நாள் கூட்டத்தில் 491 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கட்செவி அஞ்சல் வாயிலாக நடத்தப்பட்ட மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 491 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கட்செவி அஞ்சல் வாயிலாக நடத்தப்பட்ட மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 491 மனுக்கள் பெறப்பட்டன.

கரோனா பொது முடக்கம் காரணமாக குறைகேட்பு நாள் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கட்செவி அஞ்சல் வாயிலாக குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றம், பல்வேறு சான்றிழ்கள், உதவித் தொகை, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள், கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 491 மனுக்கள் கட்செவி அஞ்சல் வாயிலாக பெறப்பட்டன.

இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →