கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் மணியாரம்பட்டியில் வசிப்பவா் ரெங்கசாமி மனைவி பிச்சையம்மாள் (60).
அருகேயுள்ள தோட்ட வீட்டில் வசித்து வந்த இவரை ரெங்கசாமி பாா்க்கச் சென்றபோது பக்கத்தில் இருந்த தண்ணீரில்லா 40 அடி ஆழக்கிணற்றில் பிச்சையம்மாள் தவறி விழுந்து இறந்து கிடந்தாா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் மூதாட்டி உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.