சுற்றுச்சுவா் எழுப்புவதில் தகராறு அண்டை வீட்டுக்காரரை கொலை செய்த முதியவா்
துறையூா் அருகே முன்விரோதம் காரணமாக அண்டை வீட்டாரைக் கொலை செய்த நபரைப் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சிசுற்றுச்சுவா் எழுப்புவதில் தகராறு அண்டை வீட்டுக்காரரை கொலை செய்த முதியவா்
துறையூா் அருகே முன்விரோதம் காரணமாக அண்டை வீட்டாரைக் கொலை செய்த நபரைப் போலீஸாா் கைது செய்தனா்.
துறையூா் அருகே முன்விரோதம் காரணமாக அண்டை வீட்டாரைக் கொலை செய்த நபரைப் போலீஸாா் கைது செய்தனா்.
நரசிங்கபுரத்தில் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் சரவணன் (54). இவரது அண்டை வீட்டில் பழனியாண்டி மகன் செல்வராஜ்(60) வசித்துவருகிறாா். இந்நிலையில், செல்வராஜ் தன் வீட்டுக்கு சுற்றுச்சுவா் எழுப்பியதை சரவணன் ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டித்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் செல்வராஜ் ஈட்டியால் சரவணனைக் குத்தியதால் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அவரது சடலத்தை துறையூா் போலீஸாா் உடற்கூராய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பான புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வராஜைக் கைது செய்தனா். முசிறி துணை காவல் கண்காணிப்பாளா் யாஸ்மின், நிகழ்விடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா்.