முகப்பு
திருச்சி

பெண்களின் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்த சமூக சேவகா், தொண்டு நிறுவனத்துக்கு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

Updated On : 3 ஜூன், 2024 at 11:35 PM
பகிர்:

திருச்சி, ஜூன் 3: திருச்சி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக சிறப்பாகப் பணிபுரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்தினா் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்த விருதுகள் சுதந்திர தின விழாவின்போது ஆண்டுதோறும் தமிழக முதல்வரால் வழங்கப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா், தொண்டு நிறுவனங்கள் 2024ஆம் ஆண்டுக்கு தமிழக அரசின் ட்ற்ற்ல்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விதிமுறைகள் இதே தளத்தில் உள்ளன. இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசி நாள் ஆகும். தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட, 18 வயதுக்கு மேற்பட்டவராக, குறைந்தது 5 ஆண்டுகள் சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்குப் பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி,இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றும் சமூக சேவகா் (ம) நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ாகவும் இருத்தல் வேண்டும். தகுதியானோா் விண்ணப்பித்து விருது பெறலாம்.