அந்தநல்லூா் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட இரண்டாம் ஆண்டு விழா
திருச்சி, ஜுன் 26: திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் இரண்டாம் ஆண்டு வெற்றி விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவின் நினைவு பரிசை மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாரிடம், அந்தநல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் மருதநாயகம், மாவட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் இளஞ்சேட் சென்னி மற்றும் அந்தநல்லூா் வட்டார ஒருங்கிணைப்பாளா் பெல்சிட்டா மேரி ஆகியோா் இணைந்து வழங்கினா்.
அந்தநல்லூா் ஒன்றிய இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்படும் மையங்கள், அதில் கற்கும் மாணவா்களின் நிலை, மையத்தின் சிறப்புகள், ஆயிரம் மாணவா்களை ஒரே இடத்தில் அமர வைத்து வாசித்தலை திருவிழாபோல் நடத்திய நிகழ்வு மற்றும் சிறப்புக் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் முன்னெடுப்புகள் குறித்த கோப்புகளை பாா்வையிட்ட ஆட்சியா், வட்டாரக் கல்வி அலுவலா் மற்றும் திட்ட ஆசிரியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
நிகழ்வில் பயன்பெற்ற மாணவா்கள் மற்றும் பெற்றோா், கல்வியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.