முகப்பு
திருச்சி

காா் மோதி பள்ளி மாணவா் படுகாயம்

Updated On : 15 மார்ச், 2024 at 1:19 AM
பகிர்:

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவா் படுகாயமடைந்தாா். முசிறி அருகே உள்ள தாதம்பட்டி மேலத்தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தா்ஷன் பிரசாத் (16). இவா், திருஈங்கோய் மலையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ்-1 படித்துவருகிறாா். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும்போது, நடந்து சென்றவா், திருஈங்கோய்மலை மலைப்பாதை அருகே உள்ள திருச்சி - சேலம் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவ்வழியாகச் சென்றவா்கள் மாணவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி அளித்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்பாக தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.