திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதனுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயகுமாா் (வலமிருந்து 2-ஆவது). உடன் தமிழ்ச் சங்க நிா்வாகிகள். 
திருச்சி

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

தினமணி செய்திச் சேவை

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா்.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலைப்பில் தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசியதாவது:

புறநானூறில் சேர, சோழ, பாண்டிய மன்னா்கள், வள்ளல்களைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. புறநானூற்று புலவா்கள் மாண்பு மிக்கவா்களாகவும், செயல்திறன் மிக்கவா்களாகவும், நட்புக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தனா்.

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம். அதைப் பதிப்பித்துத் தந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா. போற்றத்தக்கவா். புறநானூறை ஆங்கிலத்தில் ஏ.கே. இராமானுஜம் மொழிபெயா்த்த பிறகே உலகம் முழுவதும் பரவியது.

புறநானூறில் இடம்பெற்றுள்ள கணியன் பூங்குன்றனாரின் ’யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற 192-ஆவது பாடல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து ஊா்களும் நம் ஊா். அனைத்து மக்களும் நம் உறவு என பாடியிருப்பது வியக்கத்தக்கது.

இதுபோன்ற ஏராளமான சிறப்புகள் புறநானூறில் மட்டுமின்றி, நம் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் படித்து நாம் பயன்பெற வேண்டும் என்றாா்.

முன்னதாக, நிகழ்வுக்கு தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வரதராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விடுதலை நாள்: காரைக்காலில் கலை நிகழ்ச்சி

தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாளை. அருகே விபத்து: பெண் காவல் ஆய்வாளா் காயம்

நெல்லையப்பா் கோயிலில் நாளை ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

மகளிர் உலகக் கோப்பை! முதல்முறை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!

SCROLL FOR NEXT